My Little Moppet Tamil

குழந்தைகள் வளர்ப்பு என்பது சவாலான காரியம். அதிலும் முதல் முறையாக குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது பல்வேறு சவால்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. குழந்தைகளை எப்படி குளிக்க வைப்பது தொடங்கி என்ன உணவு கொடுப்பது? என குழப்பத்தின் விளிம்பில் இருப்பார்கள். அவர்களின் கைபிடித்து வழிகாட்டும் ஒரு பக்கம் தான் My Little Moppet Tamil(மை லிட்டில் மொப்பட் தமிழ்) என்ற பக்கம். இதில் குழந்தையின் உடல் நலம், என்னென்ன சத்துகள் தேவை, குழந்தையின் வளர்ச்சி இதுபோன்ற எல்லாவற்றையும் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். குழந்தையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் என்ன உணவு கொடுப்பது, எப்படி அவர்களை கையாள்வது என்பது பற்றி உங்களுக்கு தெளிவாக விளக்கும் பக்கம் இது... ஒரு தாயாக நீங்களும் உங்கள் குழந்தையுடனான அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்..